Politics
Why has US paused visa appointments worldwide? Here’s what Trump’s latest immigration crackdown means for Indian applicants
August 26, 2026
1,175 views
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் அதேநேரம் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 47 இடங்களை மட்டுமே வென்றது.அதேபோல் தவெக அமைச்சரவையில் பங்கேற்க விசிகவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் கோட் உடை குறித்து பேசியிருந்தது கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன் தமிழகத்தின் அரசியல் சூழல்கள் தொடர்பான தனது பார்வைகளை நக்கீரன் டிவியில் பகிர்ந்து கொண்டார். விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைத்தள லைவ்வில் நீங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக உங்கள் பெயரைச் சொல்லி விமர்சனத்தை தெரிவித்துள்ளாரே? கீழ அடிமட்ட தொண்டனில் இருந்து மேலே இருக்கிற எங்களது தலைவன் வரைக்குமே எல்லோரும் நண்பர்கள்தான். திருமாவளவன் எங்களுக்கு தலைவர் அல்ல எங்களுக்கு அண்ணன். தாய் சிறுத்தை என்றும் சொல்லுவோம். தாய் சிறுத்தை அடிச்சாலும் அடியை வாங்கிக் கொள்வோம். இப்போது என்னைப் பற்றி திருமாவளவன் பேசிவிட்டார் என்பது எனக்கு ஹேப்பி. &039;ஒரு கருத்தை நீ உண்மை என்று உணர்ந்த பிறகு, நேர்மை என்று உணர்ந்த பிறகு, யார் தடுத்தாலும் சரி உனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசானாக இருந்தாலும் சரி, உன்னைப் பெற்றெடுத்த பெற்றோராக இருந்தாலும் சரி எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்த்துதான் ஆக வேண்டும்&039; என்பது அம்பேத்கர் சொன்ன கருத்து. சுபாஷ் சந்திரபோஸ் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். என்னை கூப்பிட்டு பலமுறை எச்சரித்திருக்கிறார் எங்கள் தலைவர். ஆனால் நான் கட்சியினுடைய பொதுச் செயலாளர் அல்ல, கட்சியினுடைய துணைப் பொதுச்செயலாளர் அல்ல, கட்சியின் அமைப்பு செயலாளர் அல்ல. அமைப்பை முறைப்படுத்தி வலிமையாக்குவைதோ, மக்களை அமைப்பாய் திரட்டி அரசியல் செலுமையாக்கும் வேலை எனக்கு இல்லை. நான் இளைஞரணி செயலாளர். இளைஞர்களுடைய மனநிலையில் இளைஞர்கள் எதை நினைக்கிறார்களோ அதை நான் பரப்ப வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும்; உண்மையாக இருக்க வேண்டும்; ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விடுதலை சிறுத்தை இளைஞனும் விரும்புகிறான். அதை நான் பறை சாற்றுவேன். அதில் என்ன தப்பு? நேர்மையாக சொல்கிறேன் திமுக இருந்த காலகட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் தலித்துகளுக்கு எவ்வளவு கொடுமை நடந்தது. நீங்கள் மறுக்கிறீர்களா? வாங்க நீதிமன்றத்தில் வைப்போம். நீதிமன்றத்துக்கு போய் தனியாக வழக்கே போடலாம் என்று இருக்கிறேன். அவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் கதிர் பதிவு செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் 15000 சாதிய மோதல்கள் நடந்திருக்கிறது. சாதிய வன்கொடுமை நடந்திருக்கிறது. வெறும் 3.37 விழுக்காடு மட்டும்தான் அதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் யார் குற்றம்? விடுதலை சிறுத்தையினுடைய குற்றம்தான். ஏன் அதை தட்டிக்கேட்க முடியவில்லை? அதனால்தான் நான் கேட்கிறேன். மனித க் கழிவு கலந்த தண்ணீரை குடித்துவிட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு வேலையை விட்டு தூக்கினார்கள். அவருக்கு வேலை வாங்கித் தர முடிந்ததா? எங்க தலைவர் எத்தனை முறை பேசி இருக்கிறார்? எத்தனை முறை உரையாடி இருக்கிறார்? ஏன் நடக்கவில்லை? நடத்த வேண்டியவர்கள் யார்? சட்டமன்றத்தில் சங்கத்தமிழன் உள்ளே இருந் தா னா? நான் பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் பேசி இருப்பேன். எங்கள் மக்கள் திமுக ஆட்சி காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று சொல்ல நான் என்ன பைத்தியக்கார பயலா?. எங்க ஊரு மதுரை மாவட்டம் மேலூரில் மேலாவலவுக்கு செத்துப்போன பிணத்தை தூக்கிச் செல்ல சுடுகாட்டு பாதை இல்லை. எத்தனை முறை நக்கீரனில் நான் இதுகுறித்து பேசி இருக்கிறேன்.