Entertainment
Sea of Remnants - Official 10-Minute Gameplay Trailer | gamescom 2026
August 25, 2026
2,382 views
மறைந்த இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய பல படங்கள் பெண்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான ஒரு படம பெண்கள் மத்தியில் நெகடீவ் விமர்சனங்களை பெற்றது என்பது பலரும் அறியாத ஒரு தகவல். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குரனாக மாறியாற்றிய பாக்யராஜ், புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு கன்னிப் பருவத்திலே படத்தில் வில்லனாக நடித்திருந்த பாக்யராஜ், 1979-ம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த பாக்யராஜ், பெண்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். குறிப்பாக, தனது மனைவி பிரிந்து சென்றாலும் 5 வருடங்களாக அவரது குடும்பத்தை பாதுகாகத்து மனைவி தன்னிடம் மீண்டும் வந்து சேர்வதற்காக காத்திருக்கும் ரகுநாத் கேரக்டரில் நடித்த மௌன கீதங்கள் திரைப்படத்தின் வெற்றி அவரை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்று பெண்களுக்கான இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது. 1981-ம் ஆண்டு பாக்யரைாஜ் இயக்கத்தில் 4 படங்கள் வெளியாகி இருந்தது. மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள் என இந்த 4 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக மௌன கீதங்கள் மற்றும் அந்த 7 நாட்கள் ஆகிய இரு படங்களும் பெண்களின் கவனத்தை ஈர்த்த படங்களாக இன்று வரை போற்றப்படுகிறது. அதே சமயம் அவர் த்ரில்லர் பாதைக்கு மாறி இயக்கிய திரைப்படம், பெண்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எதிராக இருந்தது. தனது படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாக்யராஜ் இந்த படத்திலும் அதையே செய்திருந்தாலும், தனது மனைவிக்கு எதிராக சதி செய்யும் ஒரு நெகடீவ் கேரக்டர் கொண்ட கணவராக பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, இந்த 7 நாட்கள் படப்பிடிப்புக்காக பாக்யராஜ் கோவை சென்றுள்ளார். அப்போது ஒரு தியேட்டரில் இருந்து மக்கள் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்துள்ளனர். அங்கு விடியும் வரை காத்திரு திரைபடபடம் தான் ஓடியது என்பதை தெரிந்துகொண்ட பாக்யராஜ் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்க காரை மேதுவாக ஓட்டுமாறு கூறியுள்ளார். அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக, தலையில் துணிக் கட்டிக்கொண்டு கேட்ட பாக்யராஜ்க்கு, இது பாக்யராஜ் படம் இல்லை, அவர் மனைவி மீது பாசமாக இருப்பார். இந்த படம் தப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று மக்கள் குறிப்பாக பெண்கள் பேசியுள்ளனர். இதன்பிறகு தான் பாக்யராஜ் இனி த்ரில்லர் படங்கள் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து காமெடியில் இறங்கியதாக கூறியுள்ளார். ஆனால் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.